நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள்


நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 11 Dec 2021 2:30 AM IST (Updated: 11 Dec 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

ஈரோடு
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். 
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சிகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் ஆண்களுக்கு 127, பெண்களுக்கு 127, பொது 189 என மொத்தம் 443 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஈரோடு மாநகராட்சியில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 364 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 785 பெண் வாக்காளர்களும், 42 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சி
மேலும் பவானி நகராட்சியில் ஆண்களுக்கு 9, பெண்களுக்கு 9, இருபாலர் 18 என மொத்தம் 36 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இங்கு 14 ஆயிரத்து 502 ஆண் வாக்காளர்களும், 15 ஆயிரத்து 780 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 30 ஆயிரத்து 282 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். கோபி நகராட்சியில் ஆண்களுக்கு 29, பெண்களுக்கு 29, இருபாலர் 1 என 59 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இங்கு 22 ஆயிரத்து 522 ஆண் வாக்காளர்களும், 25 ஆயிரத்து 22 பெண் வாக்காளர்களும் 3-ம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 47 ஆயிரத்து 545 வாக்காளர்கள் உள்ளனர்.
புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1, இரு பாலர் 17 என மொத்தம் 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 8 ஆயிரத்து 98 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 8 ஆயிரத்து 833 பேரும் 3-ம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 16 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர். சத்தியமங்கலம் நகராட்சியில் ஆண்களுக்கு 12, பெண்களுக்கு 12, இருபாலர் 15 என மொத்தம் 39 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்து 911 ஆண் வாக்காளர்கள், 17 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்கள் 3-ம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 33 ஆயிரத்து 86 வாக்காளர்கள் உள்ளனர்.
1,251 வாக்குச்சாவடிகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில், ஆண்களுக்கு 25, பெண்களுக்கு 25, இருபாலர் 605 என மொத்தம் 655 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 816 பேரும், 2 லட்சத்து 7 ஆயிரத்து 708 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 14 பேரும் என மொத்தம் 4 லட்சத்து ஆயிரத்து 538 வாக்காளர்கள் உள்ளனர். 

Next Story