கட்டுமான பணியின்போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


கட்டுமான பணியின்போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 Dec 2021 3:26 PM IST (Updated: 11 Dec 2021 3:26 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணியின் போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த ஒலிமுகமது பேட்டை புதுநகர் அவென்யூவை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இந்தநிலையில் சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த சுமித் (வயது 47) என்பவர், புதிய வீட்டுக்கான இரும்பு கேட், மாடி படிகள் உள்ளிட்டவை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று 3-வது மாடி அருகே எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணியாற்றியபோது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

படுகாயம் அடைந்த சுமித்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 அவசர ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது சுமித் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story