தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மீன்கள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்பு


தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மீன்கள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 3:32 PM IST (Updated: 11 Dec 2021 3:32 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மீன்கள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்ப்பட்டு,

பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை ஊக்குவித்தல் திட்டத்தில் பயனாளிகளால் ஏற்கனவே அமைக்கப்பட்ட 1000 ச.மீ. பரப்பளவில் உள்ள பண்ணைக்குட்டைகளில் செலவுதொகை ரூ.62,500-ல் 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

பண்ணைக்குட்டைகளில் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்திட பாலித்தீன் விரிப்பு செய்து மீன் வளர்த்தல் திட்டம். பயனாளிகளால் ஏற்கனவே அமைக்கப்பட்ட 1000 ச.மீ. பரப்பளவில் உள்ள பண்ணைக்குட்டைகளில் பாலித்தீன் விரிப்பு செய்து மீன்வளர்ப்பு செய்திட ஆகும் மொத்த செலவினத்தொகை ரூ.1,87,500-ல் 40 சதவீத மானியமாக வழங்கப்பட உள்ளது. விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டம், பயனாளிகளால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் விரால் மீன்வளர்ப்பு பன்ணைகளை ஊக்குவித்திட ஆகும் மொத்த செலவினத்தொகை ரூ.75,000ல் 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து கீழ்க்காணும் திட்டங்களில் பயன்பெற வரவேற்கப்படுகிறது.

கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளர்த்தல், கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளர்த்திட பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம்) மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம்) வழங்கப்பட உள்ளது.

புதிய மின்வளர்ப்பு குளங்கள் 10 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்திட பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம்) வழங்கப்பட உள்ளது.

மீன்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்தல் மின்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்திட ஏதுவாக பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்) வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மீன்வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். மீன்வளர்ப்பு திட்டங்களில் பயன்பெற விரும்பும் செங்கல்பட்டு, மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தை (கைப்பேசி எண்: 8489189720, 8489911333) தொடர்புகொண்டு வருகின்ற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குனர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை, சென்னை - 600 115 (அலுவலக தொலைபேசி எண்: 044 - 24492719) என்ற அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story