குமாரபாளையத்தில் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்
குமாரபாளையத்தில் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்
சுல்தான்பேட்டை
தினத்தந்தி செய்தி எதிரொலியாக குமாரபாளையத்தில் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
மழைநீரில் மூழ்கியது
சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் கிராமத்திலிருந்து செல்லிய கவுண்டன்புதூர் மற்றும் வடவேடம்பட்டி செல்லும் சாலையில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த பலத்த மழையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கியது.
இதனால் இந்த ரோட்டை கடக்க முடியாமல் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள், பாதசாரிகள், விவசாயிகள் என பலதரப்பினரும் கடும் அவதி அடைந்தனர். அதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மழைநீரில் மூழ்கிய தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பான செய்தி தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியது.
சீரமைக்கும் பணி தொடக்கம்
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குமாரபாளைத்தில் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலத்தை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில், ஒன்றிய பொது நிதியில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் மழைநீரில் மூழ்கிய தரைப் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. அதன்படி சிமெண்டு குழாய் கொண்டு சீரமைக்கும் பணி கிரேன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். மேலும் அவர்கள் பணியினை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்த ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story