மக்கள் நீதிமன்றத்தில் 111 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 111 வழக்குகளுக்கு தீர்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 111 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குளை குறைக்கும் வகையில் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறும். பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்திற்கு குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட நீதிபதி பாபு தலைமை தாங்கினார். இதில் சப்-கோர்ட்டு நீதிபதி பாலமுருகன், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி, ஜே.எம். 2 நீதிபதி செல்லையா, வக்கீல்கள் சங்க தலைவர் துரை, வக்கீல்கள் ரவி, ரவிசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
மோட்டார் வாகன விபத்துகள் 62 விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 28 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.2 கோடியே 14 லட்சத்து 74 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. காசோலை மோசடி வழக்குகள் 120 எடுத்துக் கொள்ளப்பட்டு 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டில் வழக்கு தொடராமல் மக்கள் நீதிமன்றம் மூலம் நேரடியாக நோட்டீசு 32 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் சப்-கோர்ட்டு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம். 1, ஜே.எம்.2 ஆகிய கோர்ட்டுகளில் உள்ள வழக்குகள் 1471 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 46 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 61 ஆயிரத்துக்கு 500-க்கு சமரசம் செய்யப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story