தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெண்கள் ஆர்வம்
தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெண்கள் ஆர்வம்
கோவை
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதற்காக 13 கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அந்த வகையில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் கோவையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது.
கோவையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், காந்திபுரம் பஸ் நிலையம், கோவை ரெயில் நிலையத்தில் நடந்த முகாமில் பெண்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
கொரோனா தடுப்பூசி 2-வது டோசை குறிப்பிட்ட கால இடைவெளி யில் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த பலர் ஆர்வம் காட்டவில்லை. தற்போது ஓமைக்ரான் வைரஸ் அச்சம் பரவி வருகிறது.
இதனால் நேற்று நடந்த முகாமில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் அடுத்தடுத்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story