தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Dec 2021 8:53 PM IST (Updated: 11 Dec 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


குப்பைகளால் சுகாதார சீர்கேடு 

கோவையை அடுத்த துடியலூர் நஞ்சப்ப கவுண்டர் காலனியில் குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவே குப்பைகளை முறையாக அள்ளிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சவுந்தர், துடியலூர்.


தெரு நாய்கள் தொல்லை 

பொள்ளாச்சி மகாலிங்கபுரம், நந்தனார் காலனி, பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டில் தனியாக நடந்து செல்ல கடும் அச்சம் அடைகின்றனர். எனவே, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி நாய் தொல்லையை கட்டுப்படுத்த பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் உடனடியாக முன்வர வேண்டும்.
முபாரக், பொள்ளாச்சி.

தொற்றுநோய் பரவும் அபாயம்

கூடலூர் 1-ம் மைல் பகுதியில் சாலையோரம் உள்ள கழிவு நீர் வாய்க்கால் கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லைகள் அதிகரித்து டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது சம்பந்தமாக துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இனிவரும் நாட்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாசீன், கூடலூர்.

சிக்னல் அமைக்கப்படுமா?

கோவை அவினாசி சாலையில் பீளமேட்டில் கல்லூரி அருகே சிக்னல் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் அடிக்கடி அரங்கேறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் அமைக்க ஆவன செய்ய வேண்டும்.
பூரணி, கோவை.

பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்

கோவை ஆலாந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட முகாசிமங்கலம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் கட்டப் பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
கந்தன், ஆலாந்துறை.

பழுதான தார்சாலை

கோவை பாலசுந்தரம் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும், 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
அபுபக்கர், கோவை.

சுகாதார சீர்கேடு

கோவை பீளமேடு ஜெகநாதபுரம் 39-வது வார்டு பகுதியில் ஏராளமான மாடுகள், கோழிகளை பொதுமக்கள் வளர்த்து வருகிறார்கள். இவற்றை முறையாக பராமரிக்காததால் கால்நடைகளை குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளை தின்பதோடு, அதனை சாலையில் இழுத்து போடுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடைகளை முறையாக பராரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்குவேல், கோவை.

குண்டும், குழியுமான சாலை

கோவை சுக்கிவார்பேட்டை பசுவண்ண கோவில் முன்பு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்ராஜ், சுக்கிவார்பேட்டை.

ஆபத்தான நிழற்குடை 

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் ஈளாடா கிராமத்தில் பயணிகள் வசதிக்காக பேருந்து நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்த நிழற்குடை முழுவதும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயமான நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் அங்கு நிற்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே பேருந்து நிழற்குடையை இடித்து அகற்றி புதிய நிழற்குடை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வன், ஈளாடா.

குவிந்துள்ள குப்பைகள்

கோத்தகிரி - கோடநாடு சாலையில் உள்ள ஓம் நகர் அருகே சாலையோர பள்ளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்துள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் குப்பைகளை உடனடியாக அகற்றவும், குப்பைத் தொட்டி அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நஞ்சுண்டன், கேரடாமட்டம்.


1 More update

Next Story