பொள்ளாச்சி பகுதிகளில் 17 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தடுப்பூசி


பொள்ளாச்சி பகுதிகளில் 17 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 11 Dec 2021 9:47 PM IST (Updated: 11 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதிகளில் 17 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 17 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு முகாம்

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 14-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 இதேபோன்று பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையில் முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

179 இடங்கள்

பொள்ளாச்சி நகராட்சியில் 10 இடங்களில் நடந்த முகாமில் 2100 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 27 இடங்களில் 3040 பேருக்கும், வடக்கில் 53 இடங்களில் 4693 பேருக்கும், ஆனைமலையில் 59 இடங்களில் 4669 பேருக்கும், கிணத்துக்கடவில் 30 இடங்களில் 3420 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தபபட்டது. பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 179 இடங்களில் நடந்த முகாமில் 17 ஆயிரத்து 922 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கோவேக்சின், கோஷீல்டு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதற்கிடையில் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தின் கீழ் முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தேவைப்படுவோருக்கு ஆஸ்பத்திரிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி கொள்ள அறிவுறுத்தபபட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
1 More update

Next Story