அதிகாரி, டிரைவர், கண்டக்டர் மீதான நடவடிக்கை ரத்து
அதிகாரி, டிரைவர், கண்டக்டர் மீதான நடவடிக்கை ரத்து
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் செல்வமேரி. மீன் வியாபாரம் செய்து வரும் இவரை துர்நாற்றம் வீசுவதாக கூறி சம்பவத்தன்று அரசு பஸ்சில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் தொடர்பாக அந்த பஸ்சின் கண்டக்டர், டிரைவர், நேர காப்பாளர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு அரசு பஸ்சில் வள்ளியூர் செல்வதற்காக ஏறிய நரிக்குறவர் குடும்பத்தினரை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் தொடர்பாக அந்த பஸ்சின் கண்டக்டர் ஜெயதாஸ், டிரைவர் நெல்சன், திருவட்டார் பணிமனை மேலாளர் அனிஷ் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நரிக்குறவர் குடும்பத்தில் கணவன்- மனைவி 2 பேரும் மதுபோதையில் பஸ்சுக்குள் தங்களுக்குள் தகராறு செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதும், அதனால் கண்டக்டர் அவர்களை பஸ்சை விட்டு இறக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து கண்டக்டர் ஜெயதாஸ், டிரைவர் நெல்சன், பணிமனை மேலாளர் அனிஷ் ஆகியோரின் பணியிடை நீக்க உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது. இதேபோல அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த்தை பணியில் இருந்து விடுவித்து, காத்தருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே அவரும் நேற்று பணிக்கு திரும்பினார். வழக்கம்போல் நேற்று அவர் ராணி தோட்டத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பணிகளை கவனித்தார்.
Related Tags :
Next Story