சீனாபுரம் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
x
தினத்தந்தி 12 Dec 2021 2:53 AM IST (Updated: 12 Dec 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

சீனாபுரம் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
மாட்டுச்சந்தை
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் மாட்டுச் சந்தை கூடியது. இந்த சந்தைக்கு பெருந்துறை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோர்ப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து 50 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், இதே இன கிடாரி கன்றுகள் 50-ம் விற்பனைக்கு வந்திருந்தன.
சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 50-ம், இதே வகை கிடாரி கன்றுகள் 100-ம், விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. 
ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
 சந்தையில், விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரையிலும், சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரையிலும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது.
மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கால்நடைகளை பெருந்துறை, குன்னத்தூர், திங்களூர், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், நசியனூர், சென்னிமலை ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் விலை பேசி பிடித்து சென்றனர்.

Next Story