பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தார்கள்.
வேட்டையாடும் சிறுத்தை
தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கல்குவாரிகள் உள்ளன. கடந்த 2 வருடங்களாக இந்த கல்குவாரிகளில் சிறுத்தை ஒன்று பதுங்கியுள்ளது. இதுவரை இந்த சிறுத்தை 20-க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 30-க்கும் மேற்பட்ட காவல் நாய்களையும் வேட்டையாடி உள்ளது.
வேட்டையாடும் போது மட்டும் சிறுத்தை வெளியே வருவதும், வேட்டையாடிய பின்னர் கல்குவாரிக்குள் சென்று பதுங்கிக்கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, பல இடங்களில் கூண்டு அமைத்து பார்த்துவிட்டார்கள். ஆனால் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
பிடிக்க கோரிக்கை
இந்தநிலையில் நேற்று மதியம் பீம்ராஜ்நகர் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்தது. அந்த வழியாக மாடு மேய்க்க சென்ற ஒருவர் சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார். பின்னர் சற்று தூரமாக நின்றுகொண்டு சிறுத்தையை தான் வைத்திருந்த செல்போனில் படம் பிடித்தார். அதை ஊர்ப்பொதுமக்களுக்கும், வனத்துறைக்கும் அனுப்பினார்.
பட்டபகலிலேயே கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்ததை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்து விட்டார்கள். உடனே அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Related Tags :
Next Story