கோபியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி லாரி-வேனுடன் பறிமுதல்; 3 பேர் கைது
கோபியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி லாரி-வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்
கோபியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி லாரி-வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி
கோபி அருகே உள்ள எலத்தூர் செம்மாண்டாபதியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் செம்மாண்டாபதி சென்று பார்த்த போது, அங்கு சரக்கு வேனில் இருந்து 4 பேர் ஒரு லாரியில் மூட்டைகள் ஏற்றுவது தெரிய வந்தது. உடனே போலீசார் வாகனங்களில் இருந்தவர்களை சுற்றிவளைத்தார்கள். அப்போது அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து எஞ்சிய 3 பேரை பிடித்தார்கள். பின்னர் மூட்டைகளை பிரித்து பார்த்தார்கள். அதில் ரேஷன் அரிசி இருந்தது.
கர்நாடகாவுக்கு கடத்தல்
போலீசார் பிடிபட்ட 3 பேரிடமும் விசாரித்தபோது, அவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த நந்தகுமார், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவலிபாளையத்தை சேர்ந்த குப்புசாமி, சத்தியமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் என்பதும், இவர்கள் கோபியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 12 டன் ரேஷன் அரிசியை வேனில் கொண்டு வந்து லாரியில் கடத்த முயன்றதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் நந்தகுமார், குப்புசாமி, ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.
போலீசார் சுற்றுவளைத்தபோது தப்பி ஓடியவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜன்பாபு என்கிற தாடிராஜா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story