மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மினிலாரி-கார் மோதல்


மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மினிலாரி-கார் மோதல்
x
தினத்தந்தி 12 Dec 2021 6:04 PM IST (Updated: 12 Dec 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

மினிலாரி மீது மோதல்

சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி தகர பெட்டிளை ஏற்றி கொண்டு மினிலாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் தேவனேரி என்ற இடத்தில் சென்ற போது பின்புறம் வந்த கார் ஒன்று மினிலாரியை முந்தி செல்ல முயன்றது.

அப்போது திடீரென மினிலாரியின் பின்னால் கார் மோதியதில் நிலைத்தடுமாறிய மினிலாரி சாலையில் கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து, காரும் சாலையில் உருண்டு பள்ளத்துக்குள் விபத்துக்குள்ளானது. இதில் வேனில் ஏற்றி செல்லப்பட்ட தகர பெட்டிகள் சாலையில் விழுந்து சிதறி கிடந்தன.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் மற்றும் காரில் பயணம் செய்த 3 பேர் என மொத்தம் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து அய்யோ, அம்மா என்று அலறிய அவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆம்புலன்சு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இ.சி.ஆர். சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து அறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story