மல்லிகை கிலோ ரூ 3 ஆயிரத்துக்கு விற்பனை
மல்லிகை கிலோ ரூ 3 ஆயிரத்துக்கு விற்பனை
கோவை
கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட் டை மற்றும் வெளிமாநில பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் அங்கு கடந்த வாரத்தை விட மல்லிகை பூ விலை 3 மடங்கு உயர்ந்து உள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.700-க்கு விற்ற மல்லிகை 8-ந் தேதி ரூ.2 ஆயிரத்துக்கும், நேற்று ரூ.3 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. அது போல் கடந்த வாரம் ரூ.600-க்கு விற்ற முல்லை நேற்று ரூ.1600-க்கு விற்றது.
கோழிக்கொண்டை கிலோ ரூ.200, ஜாதி முல்லை ரூ.1000, செவ்வந்தி (மஞ்சள்) ரூ.200, செவ்வந்தி (வெள்ளை), ரூ.320, செண்டுமல்லி ரூ.280, 15 பூக்கள் கொண்ட ரோஜா கட்டு 200, ஒரு தாமரைப்பூ ரூ.25-க்கு விற்பனையானது.
இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், கார்த்திகை மாதத்தில் 12 முகூர்த்த நாட்கள் உள்ளதால் பூக்களின் தேவை அதி கரித்தது. நாளை (இன்று) இந்த மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் மேலும் விலை அதிகரிக்கலாம். அடுத்த மாதம் பூக்கள் விலை குறைந்து விடும் என்றார். பூ விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story