காட்சி பொருளாக மாறிய தகவல் பலகைகள்


காட்சி பொருளாக மாறிய தகவல் பலகைகள்
x
தினத்தந்தி 12 Dec 2021 8:47 PM IST (Updated: 12 Dec 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

காட்சி பொருளாக மாறிய தகவல் பலகைகள்

கோவை

கோவை டி.பி. மாதிரி சாலையில் தகவல் பலகைகள் காட்சி பொருளாக மாறிவிட்டது.

மாதிரி சாலை

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம், வாலங்குளம் உள்ளிட்ட 6 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ஒருங்கிணைந்த பஸ்நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டி.பி. சாலையை, பிரான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மாதிரி சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இதற்காக திட்டமிட்ட மழைநீர் வடிகால், அகலமான நடைபாதை, அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட்டன. மேலும் மாநகராட்சி கலையரங்கம் அருகே தேவதை சிலை மற்றும் ரவுண்டானா நடுவில் அலங்கார விளக்கு, கற்களால் ஆன இருக்கைகளும் அமைக்கப்பட்டன. 

இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் தலைவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகைகள் வைக்க திட்டமிடப்பட்டது.

திருக்குறள்

இதற்காக சாலையோரங்களில் 50-க்கும் மேற்பட்ட தகவல்பலகைகள் வைக்கப்பட்டன. அதில் திருக்குறள், அதன் விளக்கம் எழுதப்பட்டு இருக்கும். மேலும் அதில் கோவை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்களின் வரலாறு குறித்து தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாசகங்கள் எழுத திட்டமிடப்பட்டது.

 அதன்படி ஒரு தகவல் பலகையில், திருக்குறள், கோவைக்கு சிறுவாணி நீர் வர காரணமாக இருந்த சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியாரின் வரலாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் மற்ற தகவல் பலகைகள் வெறும் காட்சி பொருளாக நிற்கின்றன. எனவே அந்த தகவல் பலகையில் திட்டமிட்டபடி சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் வரலாறை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story