மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் போக்சோவில் கைது
மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் போக்சோவில் கைது
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-
ஆபாச குறுஞ்செய்தி
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சாய்முத்து வீரப்பன் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சாய்முத்து வீரப்பன், அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவருடன் நட்பாக பழகி வந்தார். மேலும் மாணவியுடன் அவர் செல்போனில் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.
இந்தநிலையில் திடீரென சாய்முத்துவீரப்பன், அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதோடு, மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
போக்சோவில் வாலிபர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவி மற்றும் அவரின் பெற்றோர் இதுபற்றி ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சாய் முத்துவீரப்பன், மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாய் முத்துவீரப்பனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story