கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை திடீர் வீழ்ச்சி
கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை திடீர் வீழ்ச்சி
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.58 ஏலம் போனது.
காய்கறி சந்தை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் தக்காளி செடிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளிலும் இருந்த காரணத்தால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு குறைந்த அளவில் தக்காளி வரத்து இருக்கிறது.
குறைந்த அளவில் தினசரி காய்கறி சந்தைக்கு வரும் தக்காளிகளை கொள்முதல் செய்ய தமிழகத்தில் பல மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்ததால் தக்காளி விலை அதிகரித்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிலோ தக்காளி 86 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது.
திடீர் வீழ்ச்சி
இந்தநிலையில் நேற்று கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி 58 ஏலம் போனது. இது கடந்த வெள்ளிக்கிழமை விட ஒரு கிலோவிற்கு ரூ.28 குறைவாகும். இதனால் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் தக்காளி விலை குறைய தொடங்கியுள்ளது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சி குறித்து கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
ரூ.58-க்கு விற்பனை
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் விளைந்த தக்காளிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது மைசூர் பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஏராளமான வியாபாரிகள் தற்போது மைசூரிலிருந்து தக்காளிகளை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளனர்.
ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு வெறும் ரூ.58 வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மைசூர் பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தால் இன்னும் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story