தடுப்பூசி முகாமில் அதிகாரிகள் ஆய்வு


தடுப்பூசி முகாமில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 12 Dec 2021 9:49 PM IST (Updated: 12 Dec 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி முகாமில் அதிகாரிகள் ஆய்வு

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், ஜல்லிபட்டி உள்படமொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினரால் தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. பாதிப்பு அதிகம் இருந்த ஊராட்சிகள், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகள் அடிக்கடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சுல்தான்பேட்டையில் 20 இடங்களில் முகாம் அமைத்தும், தொழிற்சாலைகளில் நேரடியாக சென்றும், வீடு, வீடாக சென்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இந்தப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சாய்ராஜ் சுப்பிரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணையன் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, ஊராட்சி செயலாளர் வீரமுத்துசெஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் இதுவரை எத்தனை பேருக்கு முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு பணியில் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து விளக்கினார். தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.

Next Story