புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 13 Dec 2021 2:17 AM IST (Updated: 13 Dec 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

புகாா் பெட்டி

குப்பைகளை அள்ள வேண்டும்
சீனாபுரம் ஊராட்சி ஆயிக்கவுண்டன்பாளையத்தில் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பெருந்துறை.

செடி, கொடிகள் அகற்றப்படுமா?
மொடக்குறிச்சியில் இருந்து முள்ளாம்பரப்பு செல்லும் வழியில் பூலப்பாளையம்  உள்ளது. இங்கு ரோட்டோரம் செடி, கொடிகள் வளர்ந்து ரோட்டை மறைத்தபடி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே செடி, கொடிகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாலு, ஈரோடு.

குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்
கோபி நகராட்சி 23-வது வார்டுக்கு உள்பட்ட சாமிநாதபுரம் என்ற பகுதியில் பொது சுகாதார கழிவறை உள்ளது. இங்கு தண்ணீர் குழாய்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. எனவே குழாய் உடைப்பை உடனே சரிசெய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
தமிழீழம், சாமிநாதபுரம், கோபி

தேங்கிநிற்கும் கழிவுநீர்
ஈரோடு 46 புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட முள்ளாம்பரப்பு நால்ரோட்டுக்கு அருகே சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முள்ளாம்பரப்பு.

ஆபத்தான மின்கம்பம்
சிவகிரி பாரதி தெருவில் மனவளக்கலை மன்றம் அருகே மின்கம்பம் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் மின்கம்பம் அருகில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி வருகிறார்கள். மின்கம்பம் கீழே விழுந்து ஆபத்து ஏற்படும் முன்பு உடனடியாக இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள் சிவகிரி

குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு பெரியசேமூரில் இருந்து ராசாம்பாளைம் செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குண்டும்-குழியுமான சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமோதரன், ஈரோடு.


Next Story