சிங்கப் பெருமாள் கோவில் அருகே சாலை விபத்தில் மகளிர் திட்ட அதிகாரி காயம்
சிங்கப் பெருமாள் கோவில் அருகே சாலை விபத்தில் மகளிர் திட்ட அதிகாரி காயம் அடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம் சத்யா நகரில், செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் திட்ட இயக்குனராக ஸ்ரீதர் என்பவர் பதவி வகித்து வருகிறார். சிங்கப் பெருமாள் கோவில் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவர், நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் அலுவலக பணி காரணமாக அவருக்கு சொந்தமான காரில் அலுவலகம் நோக்கி சென்றார்.
அப்போது திருத்தேரி வரசித்தி விநாயகர் கோவில் அருகே வந்தபோது செங்கல்பட்டு நோக்கி சென்ற மற்றொரு காரின் பின்புறத்தில் அரசு அதிகாரி ஓட்டி வந்த கார் எதிர்பாராமல் மோதியது. இந்த விபத்தில் ஸ்ரீதருக்கு லேசான காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து ரோந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
Related Tags :
Next Story