100 கோடியில் சத்தி சாலை விரிவாக்கம்


100 கோடியில் சத்தி சாலை விரிவாக்கம்
x
தினத்தந்தி 13 Dec 2021 7:05 PM IST (Updated: 13 Dec 2021 7:05 PM IST)
t-max-icont-min-icon

100 கோடியில் சத்தி சாலை விரிவாக்கம்


 கோவை

சரவணம்பட்டியில் இருந்து புளியம்பட்டிவரை ரூ.100 கோடியில் சத்தி சாலை விரிவுபடுத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

விபத்துகள் அதிகரிப்பு

கோவை சத்தி ரோடு சரவணம்பட்டி பகுதியில் வாகன போக்குவ ரத்து அதிகமாக உள்ளது. 

இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. மேலும் உயிரிழப்பு மற்றும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 

எனவே சத்தி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. 

இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ் சாலைத்துறை சார்பில் சத்தி சாலையை அகலப்படுத்துவது குறித்து திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

 அதற்கு ஒப்புதல் அளித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்து நிதி உதவி பெற்று உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது

ரூ.100 கோடி

சரவணம்பட்டியில் இருந்து அன்னூர் வழியாக புளியம்பட்டி வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.100 கோடி செலவில் இருபுறமும் சாலையை அகலப்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அனுமதி கிடைத்து உள்ளது.

 தற்போது இந்த சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. அதை 10 மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது. 

இடதுபக்கம் 1.5 மீட்டர் வலது பக்கம் 1.5 மீட்டர் என்று 3 மீட்டர் அகலப்படுத்தப்படும். போக்குவ ரத்துக்கு இடையூறு ஏற்படாமல் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறும்.

மார்ச் மாதம் தொடங்குகிறது

அந்த பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. சாலையை அகலப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல், விபத்து, உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.சத்தி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பது சரவணம்பட்டி பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். 

அது நிறைவேற இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story