கோவை சிறை கைதி வரைந்த ஓவியத்துக்கு 3வது பரிசு
கோவை சிறை கைதி வரைந்த ஓவியத்துக்கு 3வது பரிசு
கோவை
தேசிய அளவிலான போட்டியில் கோவை சிறை கைதி வரைந்த ஓவியத்துக்கு 3-வது பரிசு கிடைத்தது.
சிறைக்கைதி
கரூரை சேர்ந்தவர் பி.பிரபு (வயது42). கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இவருக்கு ஓவியம் வரையும் திறமை உள்ளது.
அகில இந்திய அளவில் சிறைக்கைதிகளுக்கான ஓவியப்போட்டி தன்னார்வ அமைப்பு சார்பில் நடத்தப் பட்டது.இதற்கு, தமிழகம் மற்றும் பிறமாநில மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் வரைந்த ஓவியம் போட்டிக்கு அனுப்பப்பட்டது.
இதில் கோவை சிறை கைதி பிரபு வரைந்த ஓவியமும் அனுப்பி வைக்கப்பட்டது.
3-வது இடம்
சிறையில் உள்ள கைதி ஒருவர் தொலைபேசியில் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் பேசுவது போன்று ஓவியத்தை தத்ரூபமாக பிரபு வரைந்து அனுப்பி இருந்தார். இதில் பிரபு வரைந்த ஓவியம் அகில இந்திய அளவில் 3-வது இடம் பெற்றது.
இதையடுத்து இணையவழியில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மத்தியபிரதேச மாநில சிறைத்துறை இயக்குனர் அரவிந்த்குமார், சிறப்பாக ஓவியம் தீட்டி 3-ம் இடம் பிடித்த பிரபுவுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சுவரில் ஓவியங்கள்
கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு பிரபுவிடம் பரிசு ஒப்ப டைக்கப்பட உள்ளது. இதையடுத்து கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சூப்பிரண்டு ஊர்மிளா, கூடுதல் சூப்பிரண்டு சதீஷ்குமார் ஆகியோர் 3-வது பரிசு பெற்ற பிரபுவை பாராட்டினர்.
கோவை சிறை வளாகத்துக்குள் உள்ள சுவர்களை அழகுபடுத்தும் வகையில் பிரபு ஓவியங்கள் வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story