உக்கடம் மேம்பால பணி மந்தம்


உக்கடம் மேம்பால பணி மந்தம்
x
தினத்தந்தி 13 Dec 2021 7:18 PM IST (Updated: 13 Dec 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

உக்கடம் மேம்பால பணி மந்தம்


கோவை

உக்கடம் மேம்பால பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உக்கடம் மேம்பாலம்

கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை ரூ.430 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கரும்புக்கடை வரை முதல்கட்ட பால பணிகள் முடிந்துள்ளது.


உக்கடம் பஸ்நிலைய பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பியை தரையில் பதிக்கும் பணிகளை ரூ.9 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பணிகள் இன்னும் நடைபெற வில்லை. 

இதனால் பாலம் இணைக்கப்படாமல் இடைவெளியுடன் நிற்கிறது. மேலும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் இறங்குதளம் அமைப்ப தற்காக டோபிகானா பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியும் முடிவடைய வில்லை. 

இதுதவிர கரும்புக்கடையில் இருந்து ஆத்துப் பாலம் வரை தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.

ஆமை வேகத்தில்

கோவையில் திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய இடங்க ளில் மேம்பால பணிகள் தொடங்குவதற்கு முன்பே உக்கடத்தில் மேம் பால பணி தொடங்கியது. 

ஆனால் திருச்சி ரோடு, மேட்டுப்பாளை யம் ரோட்டில் மேம்பால பணிகள் முடிவடைந்து உள்ளன. 

ஆனால் உக்கடத்தில் மேம்பால பணிகள் முடியாமல் பாதியில் நிற்கிறது. அந்த மேம்பால பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

2023-ம் ஆண்டு நிறைவடையும்

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், மின்சார கம்பியை தரையில் பதித்து, 

உக்கடம் பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிவடைந்து விடும். 

ஆத்துப்பாலத்தில் பணிகள் நடைபெற்று முழு பணிகளும் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story