தேங்காய் பருப்பு ஏலம்


தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 13 Dec 2021 9:58 PM IST (Updated: 13 Dec 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய் பருப்பு ஏலம்

காங்கேயம், 
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 11 விவசாயிகள் 35 மூட்டைகள் (1652 கிலோ) தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், காங்கேயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வியாபாரிகள் தேங்காய் பருப்பை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.61 லட்சத்திற்கு பருப்பு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ.80-க்கும், சராசரியாக ரூ.99-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் செய்திருந்தார்.

Next Story