கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்துக்கான காசோலை


கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்துக்கான காசோலை
x
தினத்தந்தி 13 Dec 2021 10:01 PM IST (Updated: 13 Dec 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

விருப்ப நிதியில் இருந்து கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்துக்கான காசோலையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

திருவாரூர்:
விருப்ப நிதியில் இருந்து கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்துக்கான காசோலையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். 
மக்கள்  குறைதீர்க்கும் கூட்டம் 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 345 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கல்வி கட்டணத்துக்கான காசோலை 
அதனைத்தொடர்ந்து, மன்னார்குடி வட்டம் மானங்காத்தான் கோட்டகம் கிராமத்தினை சேர்ந்த மாணவி வேம்பரசிக்கு கல்லூரி கல்வி கட்டணத்திற்காக கலெக்டரின்  விருப்ப நிதியிலிருந்து ரூ.17 ஆயிரத்திற்கான காசோலையை  மாணவிக்கு கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம்,  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story