கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பரபரப்பு: எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் உள்ளிருப்பு போராட்டம்


கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பரபரப்பு: எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2021 2:03 AM IST (Updated: 14 Dec 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடுமுடி
கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
தெய்வீக காசி
காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெய்வீக காசி என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் பார்க்கும் வகையில் கோவில்களில் திரை அமைத்து, ஒளிபரப்ப பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். 
பிரசித்திபெற்ற கொடுமுடி மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலிலும் இதற்கான ஏற்பாடுகளை மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா,.ஜ.க. நிர்வாகிகள் செய்திருந்தார்கள். 
ஆனால் கோவில் செயல் அதிகாரி, கோவிலுக்குள் ஒளிபரப்ப கூடாது என்று அனுமதி மறுத்ததாக தெரிகிறது. 
உள்ளிருப்பு போராட்டம்
இதற்கு கண்டனம் தெரிவித்து சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று காலை கோவிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் போலீசாருடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோவில் நடையை 12.30 மணிக்கு அடைத்துவிட்டார்கள். அந்த நேரத்தில் நீங்கள் கோவிலுக்குள் இருக்ககூடாது என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோவிலைவிட்டு வெளியேறினார்கள். 
சத்திரத்தில் ஒளிபரப்பு
அதன்பின்னர் கோவில் புதுச்சத்திரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற காசி நிகழ்ச்சி திரையிடப்பட்டது. 
இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் எம்.பி. சவுந்தரம், மண்டலத் தலைவர் கிளாம்பாடி சேகர், ஹரிஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Next Story