கொரோனாவுக்கு 3 பேர் பலி; புதிதாக 53 பேருக்கு தொற்று


கொரோனாவுக்கு 3 பேர் பலி; புதிதாக 53 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 14 Dec 2021 2:10 AM IST (Updated: 14 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானாா்கள். புதிதாக 53 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 372 பேருக்கு பரிசோதனை செய்ததில், 51 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 68 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 690 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயது ஆண் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மேலும் கொரோனாவுக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண் மற்றும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது மூதாட்டி ஆகியோர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 621 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story