காஞ்சீபுரத்தில் காளிகாம்பாள் கோவிலுக்கு வைரக்கல் பதித்த திருமாங்கல்யம்


காஞ்சீபுரத்தில் காளிகாம்பாள் கோவிலுக்கு வைரக்கல் பதித்த திருமாங்கல்யம்
x
தினத்தந்தி 14 Dec 2021 6:21 PM IST (Updated: 14 Dec 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் காளிகாம்பாள் கோவிலுக்கு வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை ஆன்மீகப் பிரமுகர் காணிக்கையாக நேற்று அர்ச்சகரிடம் வழங்கினார்.

பெரிய காஞ்சீபுரத்தில் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆன்மீகப் பிரமுகர் ஹரிஷ். காளிகாம்பாள் கோவில் உள்ள அம்பாளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 2 வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை காணிக்கையாக நேற்று அர்ச்சகரிடம் வழங்கினார்.

அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட திருமாங்கல்யத்தை மேளதாளங்கள், அதிர்வெட்டுகள் முழங்க அர்ச்சகர்கள் சாற்றினார்கள்.

Next Story