கைதான ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 14 Dec 2021 7:29 PM IST (Updated: 14 Dec 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

கைதான ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கோவை

கோவை பிளஸ் - 2 மாணவி தற்கொலை தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

பிளஸ் - 2 மாணவி தற்கொலை

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலை பள்ளிக் கூடத்தில் படித்த பிளஸ் -2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்தது தெரிய வந்தது. 

கடந்த மாதம் 11-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த னர். 

இதையடுத்து மாணவியின் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத அந்த தனியார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமீனில் உள்ளார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

கைதான மிதுன் சக்கரவர்த்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவு நகல் பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதுன் சக்கரவர்த்தியிடம் நேற்று வழங்கப்பட்டது. 


Next Story