கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்
கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்
கோவை
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான பணியில் ஈடுபடும் 55 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பறை ஏற்படுத்தி தர வேண்டும், தொழிலாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்,
இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதை எளிதாக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று காலை கட்டுமான தொழிலாளர்கள் காந்திபுரம் பகுதியில் திரண்டனர்.
பின்னர் அவர்கள், மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. கோவை மாவட்ட தலைவர் பத்பநாபன், கட்டு மான சங்க பொதுச்செயலாளர் மனோகரன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story