மோட்டார் சைக்கிளில் மஞ்சள் விளக்கை எரியவிட்டபடி வேகமாக செல்லும் வாலிபர்கள்
மோட்டார் சைக்கிளில் மஞ்சள் விளக்கை எரியவிட்டபடி வேகமாக செல்லும் வாலிபர்கள்
கோவை
மோட்டார் சைக்கிளின் இருபுறமும் மஞ்சள் விளக்கை எரியவிட்ட படி வேகமாக செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதிவேக மோட்டார் சைக்கிள்
கோவை நகரில் வாலிபர்கள் நவீன மோட்டார் சைக்கிள்களை வாங்கி அதிவேகமாக ஓட்டிச் செல்கிறார்கள்.
மேலும் அதிக சத்தம் வரும் வகையில் சாதனங்களை (சைலன்சர்) மோட்டார் சைக்கிளில் பொருத்தி இயக்குகின்றனர்.
இதனால் அதிக சத்தம் வருவதால் ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
நகரில் பல இடங்களில் சாலை கள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கீழே விழும் அபாயம்
இந்த நிலையில் அதிவேக மோட்டார் சைக்கிளின் இருபுறமும் மஞ்சள் விளக்கை (இண்டிகேட்டர்) எரியவிட்டு கோவை இடையர்பாளையம், தடாகம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் வாலிபர்கள் அதிக வேகத்தில் செல்கிறார்கள்.
இருபுறமும் விளக்கு விட்டு விட்டு எரிவதால் எந்த பக்கம் திரும்புகி றார்கள் என்பது தெரிவது இல்லை.
இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டுனர்கள் குழப்பம் அடைகின்றனர். சில நேங்களில் நிலை தடுமாறி கீழே விழும் அபாயமும் உள்ளது.
மஞ்சள் விளக்கு
மோட்டார் சைக்கிளில் இருபுறமும் மஞ்சள் விளக்கு விட்டு விட்டு எரியும் தொழில்நுட்பத்தை சில ஒர்க் ஷாப்புகளில் செய்து கொடுக்கி றார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக நகர போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்து உள்ளன.
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமாரிடமும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இருபுறமும் விளக்கு எரியவிட்டபடி மோட்டார் சைக்கிளை ஓட்டும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
அது போல் இருபுறமும் விளக்குகள் எரியும் தொழில்நுட்பத்தை மோட்டார் சைக்கிளில் அமைத்து கொடுக்கும் ஒர்க் ஷாப்புகள் எவை? என்று விசாரித்து எச்சரிக்க வேண்டும்.
கோவையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story