மாநில பூப்பந்து அணிக்கு கோவை மாணவி தேர்வு


மாநில பூப்பந்து அணிக்கு கோவை மாணவி தேர்வு
x
தினத்தந்தி 14 Dec 2021 7:44 PM IST (Updated: 14 Dec 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

மாநில பூப்பந்து அணிக்கு கோவை மாணவி தேர்வு


கோவை

தேசிய அளவில் 40-வது சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

 இந்த போட்டியில் கலந்து கொண்டு தமிழகம் சார்பில் விளையாடும் அணியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி சிதிக்சா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இவர் கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில பூப்பந்து போட்டியில் கோவை அணி சார்பில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். 

தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி சிதிக்சாவை சக வீரர்கள் பாராட்டினர். 

இந்த தகவலை கோவை மாவட்ட பூப்பந்து கழக செயலாளர் மார்ஷல் தெரிவித்து உள்ளார்.


Next Story