கோவை குற்றாலம் அருவி திறப்பு
கோவை குற்றாலம் அருவி திறப்பு
கோவை
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர் மழை பெய்தது.
இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் தற்போது மழை குறைந்து கோவை குற்றாலத்தில் வழக்கமான அளவு தண்ணீர் விழுகிறது.
இதனால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்துக்கு செல்ல சுற்றுலா பயணிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதனால் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 530 பேர் கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படு கிறது. மேலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 150 சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக் கப்பட்டனர்.
மேலும் கோவை குற்றால பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story