திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொடிநாள் நிதி சேகரிப்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொடிநாள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொடி நாள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கதிரேசன், அபுல்கலாம் ஆசாத், மருதையா பாண்டியன், கவிதா, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் கொடிநாள் நிதியை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சேகரித்தனர்.
* திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், உலக மனித உரிமைகள் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்றார். மதுரை ஐகோர்ட்டு வக்கீல் பாசமலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மனித உரிமைகள் தின உறுதிமொழியை பேராசிரியர்கள், மாணவர்கள் ஏற்றனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பார்வதி தேவி நன்றி கூறினார்.
* திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமையில் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, உதவியாளர் ஜெ.சிலுவை ரோஸ்ேமரி, கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிெமாழி ஏற்றுக் கொண்டனர்.
* கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் ‘லைட் வெயிட் செக்யூரிட்டி அப்ளிகேசன் யூசிங் செல்லுலார் ஆட்டேமேடா’ என்னும் பொருளில் நடைெபற்ற இணையவழி கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். மணிப்பால் பல்கலைக்கழக பேராசிரியர் சத்ய பிரதாராய் மற்றும் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் வி.ரோஸ்லின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். துறைத் தலைவர் வேலாயுதம் வரவேற்றார். பேராசிரியர் தாணு நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா ஆகியோர் செய்திருந்தனர்.
* கல்லூரியில் பெண்கள் வன்முறை தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பணியிடத்தில் பாலியல் வன்முறைச்சட்டம்-2013 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். முன்னதாக பெண்கள் வன்முறை தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் செ.பாசமலர் கலந்து கொண்டு, பணியிடத்தில் பாலியல் வன்முறை சட்டம் 2013 பற்றி விரிவாக பேசினார். பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தஜோதி நன்றி கூறினார். பேராசிரியர்கள் அந்தோணி சகாய சித்ரா, ஆரோக்கியமேரி, எழிலி, மகேஸ்வரி, பிரீத்தி, பிருந்தா, தாணு மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story