19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் கொடுமுடி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு


19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் கொடுமுடி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 2:33 AM IST (Updated: 15 Dec 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் கொடுமுடி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

கொடுமுடி
19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் கொடுமுடி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 
வைகுண்ட ஏகாதசி
பெருமாளுக்கு மார்கழி மாதம் உகந்ததாகும். அதனால் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் கோவிலில் உள்ள சொர்க்க வாசல் வழியாக ெபருமாள் அழைத்து வரப்படுவார். ஆனால் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக வழிபடப்படுகிறது.
அதன்படி பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் உள்ள  வீரநாராயண பெருமாள் சன்னதியிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 
சொர்க்க வாசல் தரிசனம்
முன்னதாக அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் அப்போது அனுமதிக்கப்படவில்லை. பின்னர் வீரநாராயண ெபருமாள் சன்னதி முன்புறம் அமைக்கப்பட்டிருந்த உற்சவ பெருமாளுக்கு 16 வகை திரவியங்ளால் அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 4.15 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வந்தார். பிறகு தீபாரதணை காட்டப்பட்டது. அப்போது கட்டளை தாரர்கள், கோவில் பணியாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.
 காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அதன்பின்னர் ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து சொர்க்க வாசலில் காட்சி தந்த வீரநாராயண பெருமாளை தரிசனம் செய்தார்கள்.
கோவில் தலைமை பட்டர் ஸ்ரீதர் மற்றும் ராஜா பட்டர் ஆகியோர் சாமிக்கான அலங்காரங்களை செய்திருந்தார்கள்.. இதேபோல் விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ரமேஷ் செய்திருந்தார்.

Next Story