மூங்கில், வைக்கோல், மரக்கட்டைகளில் தயாரிக்கப்பட்டவை: சென்னையில் ரூ.750-க்கு கிறிஸ்துமஸ் குடில்கள்
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் குடில்கள் ரூ.750 விலையில் விற்பனைக்கு வந்து உள்ளன.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் வீடுகள்தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுவது வழக்கம். இதில் பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்தபோது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ, அதை அப்படியே நம் கண்முன் கொண்டுவரும் வகையில் தத்ரூபமாக மாட்டு தொழுவத்தின் வடிவம் அழகுற அமைக்கப்படுகிறது. அதில் சிறுசிறு மனித உருவங்கள், ஆடுகள், ஒட்டகம், புல், ஓலை குடில் என அனைத்தும் அழகுற வடிவமைக்கப்படும்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், பனிபடர்ந்த சூழலில் அழகிய வெண்பனி பூச்சுடன் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
ரூ.750-க்கு விற்பனை
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ராஜூ என்பவர் சேத்துப்பட்டு ஸ்பார்டங் சாலையில் கிறிஸ்துமஸ் குடில்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
கிறிஸ்துமஸ் குடில்களை கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும் மூங்கில், வைக்கோல், மரக்கட்டைகளில் தயாரிக்கப்பட்ட குடில்கள் சிறியது ரூ.750-ம், பெரிய அளவிலான குடில் ரூ.1,500-க்கும் விற்பனை செய்கிறோம். சிறியது, பெரியது உள்ளிட்ட 4 வடிவங்களில் உள்ளன.
தற்போது நம்முடைய நிதிநிலைமைக்கு ஏற்றார்போல் பல வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய கிறிஸ்துமஸ் குடிலை பலர் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் எங்களிடம் குடில்களை வாங்குபவர்கள் இந்த ஆண்டும் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story