வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பழவேற்காடு சாலை தற்காலிகமாக சீரமைப்பு
பொன்னேரி அருகே ஆண்டார்மடம் கிராமத்தின் ஆரணி ஆற்றில் வழியாக செல்லும் பழவேற்காடு சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தற்காலிமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி,
கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையினாலும், பிச்சாட்டூர் நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரினாலும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பேடு குப்பம், சோமஞ்சேரி, ரெட்டிபாளையம், வஞ்சிவாக்கம் ஆகிய இடங்களில் ஆரணி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. மேலும், ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக ஆரணி ஆற்றின் குறுக்கே செல்லும் பழவேற்காடு சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் மீஞ்சூர் காட்டூர் வழியாக பழவேற்காட்டிற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் ஆரணி ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் ஆண்டார்மடம் கிராமம் மக்கள் மற்றும் பழவேற்காடு சென்று வரும் பொதுமக்களின் கோரிக்கையின்படி அடித்துச் செல்லப்பட்ட சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.
தற்போது தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏற்ப சாலை சீரமைக்கப்பட்டது.
Related Tags :
Next Story