ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி


ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி
x
தினத்தந்தி 15 Dec 2021 9:11 PM IST (Updated: 15 Dec 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
70 கோவில்களுக்கு அனுமதி
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கோவில்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில்களில் திருவிழா, தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த கோரிக்கை விடுத்திருந்தனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிற பிப்ரவரி மாதம் 4-ந்தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 70 கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில், சென்னிமலை கைலாசநாதர் கோவில், பெருந்துறை சோழீஸ்வரர் கோவில், சத்தியமங்கலம் வேணுகோபால் சாமி கோவில், பாரியூர் ஆதி நாராயண பெருமாள் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், ஈரோடு மகா வீர ஆஞ்சநேயர் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 70 கோவில்களில் குறிப்பிட்ட முக்கிய விழாக்கள் மட்டும் நடத்தி கொள்ளலாம்.
கொரோனா பாதுகாப்பு வழிமுறை
குண்டம் இறங்க கோவில் பூசாரிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தேரோட்டம், மலர் பல்லக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. ஆருத்ர தரிசனம், அனுமன் ஜெயந்தி, திருக்கல்யாணம், திருவாதிரை, தைப்பூசம், போகி பண்டிகை, பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு சமூக இடைவெளியுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
கோவிலில் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மஞ்சள் நீர் விளையாட்டு, மாவிளக்கு எடுக்க அனுமதி இல்லை. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விழாக்களை நடத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story