கோவில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
கோவில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
கோவை
கோவை போத்தனூர் அருகே கஞ்சிகோணாம் பாளையத்தில் கூலிக்கார அம்மன் கோவில் உள்ளது. இங்கு சசிக்குமார் என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு சென்றார். அவருக்கு உடல் நிலை சரி இல்லாததால் 5 நாட்களுக்கு பிறகு நேற்று கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் யு.பி.எஸ் பேட்டரி ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து கோவில் நிர்வாகி கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story