சிப்ஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை


சிப்ஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை
x
சிப்ஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை
தினத்தந்தி 15 Dec 2021 9:24 PM IST (Updated: 15 Dec 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

சிப்ஸ் நிறுவன உரிமையாளர் தற்கொலை

கோவை 

விருதுநகர் மாவட்டம் குந்தாலபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண் டியன். இவருடைய மகன் மாரிக்கனி (வயது 30). இவர் கோவை பேரூர் தீத்திபாளையத்தில் சிப்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி பெயர் முத்துச்செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டு் ஆகிறது. குழந்தைகள் இல்லை. 

இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு முத்துச்செல்வி விருதுநகருக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மாரிக்கனி தனது சிப்ஸ் நிறுவனத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story