கோதவாடி குளத்தில் அதிகாரிகள் ஆய்வு
கோதவாடி குளத்தில் அதிகாரிகள் ஆய்வு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பி.ஏ.பி. திட்ட தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று கடந்த மாதம் முதல் மெட்டுவாவி, செட்டியக்காபாளையம் ஆகிய கிளை வாய்க்கால்கள் மூலம் கோதவாடி குளத்துக்கு பி.ஏ.பி. திட்ட தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 11.74 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது 80 சதவீதம் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கடல் போல குளம் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் நேற்று கோதவாடி குளத்தை பி.ஏ.பி. திட்ட பொறியாளர் பழனிவேல், உதவி பொறியாளர் ராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, கோதவாடி குளத்தில் 20 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீர் அதிகமாக உள்ளதால் குளத்தின் அருகில் நின்று செல்பி எடுக்கவோ, தண்ணீரில் இறங்கி குளிக்கவோ வேண்டாம். குளத்தின் மதகு நிரம்பி வழிவதற்கு 4 அடி தண்ணீர் மட்டுமே தேவை. குளத்துக்கு நாளை(வெள்ளிக்கிழமை) வரை தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story