நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்


நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2021 10:02 PM IST (Updated: 15 Dec 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி நகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி நகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சி நகராட்சி நாச்சிமுத்து பிரசவ விடுதி முன் கட்டண இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இதை நடத்துவதற்கு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏலம் எடுத்த நபர் ஒரு வாகனத்துக்கு ரூ.15 வரை கட்டணம் வசூலிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மனு கொடுத்தனர். மேலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஒரு வாகனத்துக்கு ரூ.8 வசூலிக்க ஏலம் எடுத்த நபருக்கு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் அதன்பிறகும் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அனைத்து கட்சியினர் கூறுகையில், நகராட்சி நிர்ணயித்த ரூ.8 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதையும் மீறி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. தற்போது நகராட்சி அதிகாரிகள் ஏலம் எடுத்த நபருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்பி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story