அந்தியூரில் சாக்கடையில் கிடந்த செல்போன்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
அந்தியூரில் சாக்கடையில் கிடந்த செல்போன்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடனே அவைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அந்தியூரில் சாக்கடையில் கிடந்த செல்போன்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடனே அவைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சாக்கடையில் கிடந்த செல்போன்கள்
அந்தியூர் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள வீதிப் பகுதியில் நேற்று காலை 6 மணி அளவில் அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் வெள்ளையன், அய்யப்பன் ஆகியோர் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாக்கடையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்ததை அவர்கள் 2 பேரும் பார்த்தனர்.
அவற்றை திறந்து பார்த்தபோது அதில் 2 செல்போன்கள் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. உடனே அதை துப்புரவு ஆய்வாளர் குணசேகரனிடம் கூறினர். பின்னர் 3 பேரும் மணி பர்சை அந்தியூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர், சாக்கடையில் கிடந்த செல்போன்களை ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் அய்யப்பன், வெள்ளையன் ஆகியோரை பாராட்டினார்.
திருட்டு செல்போன்கள்
அந்தியூர் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவர் தனது வீட்டில் இருந்த 2 செல்போன்கள் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் ஏற்கனவே திருட்டு போயிருந்ததாக அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சாக்கடையில் கிடந்தது அவருடைய செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
உரியவரிடம் ஒப்படைப்பு
அதைத்தொடர்ந்து அவர் போலீஸ் நிலையம் சென்று, தனது செல்போனின் அடையாளங்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளில் இருந்த பெயர்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் கூறிய அடையாளங்களை வைத்து பரிசோதனை செய்து பார்த்தபோது அவை நந்தினிக்கு சொந்தமான பொருட்கள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டுகளை ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story