ஈரோடு மாநகர் பகுதியில் இந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1½ லட்சம் பேர் மீது வழக்கு பதிவு


ஈரோடு மாநகர் பகுதியில் இந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1½ லட்சம் பேர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 16 Dec 2021 2:08 AM IST (Updated: 16 Dec 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1½ லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறியும் வகையில் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனங்களில் வருபவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டில் இதுவரை ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் மட்டும் வாகன விதிமுறையை மீறியதாக 66 ஆயிரத்து 519 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றதாக 20 ஆயிரம் வழக்குகள், பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 14 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.13 லட்சத்து 36 ஆயிரம் உடனடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 29 ஆயிரம் வழக்குகள், பின் சீட்டில் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 23 ஆயிரம் வழக்குகள் உள்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 78 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் உடனடி அபராதமும் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story