மனைவி, கள்ளக்காதலனை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி கைது
மனைவி, கள்ளக்காதலனை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 32). அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர் மீது துரைப்பாக்கம் கண்ணகி நகர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தன்னைப்பற்றி கண்ணகிநகர் போலீசாருக்கு துப்பு கொடுத்ததாக சந்தியா என்ற பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் கிச்சாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனது மனைவியுடன், கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்ற நாய்சேகர் என்பவர் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்ததால் மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் இருவரையும் கொலை செய்வதற்காக பெருங்குடியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த கிச்சா மற்றும் அவரது கூட்டாளிகளான ஜெகன் (22), பார்த்திபன் (22), ராஜராஜன் (26) உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள், 5 வீச்சரிவாள்கள் மற்றும் நாட்டு குண்டு தயாரிக்கும் வெடிமருந்து பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story