வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்-தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை நேதாஜி நகரில் உள்ள நேதாஜி நகர் பகுதி உறவின்முறை சங்க நாடார் திருமண மண்டபத்தில் நடந்தது.
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.கணேசா ஏற்பாட்டில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு தலைமையில், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் முன்னிலையில், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணை பொதுச்செயலாளர் பால.முனியப்பன் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் சங்க மாநில காப்பாளர் செ.வீரக்குமார், தலைமை நிலையச்செயலாளர் வ.சி.பொன்ராஜ், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் வக்கீல் எஸ்.சரசு முத்து யாதவ், வடசென்னை மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைச்செயலாளர் எஸ்.வன்னியராஜன், ஆயுட்கால உறுப்பினர் சீனிச்சாமி, ஆர்.கே.நகர் பகுதி தலைவர் டி.வேல்ராஜா, துறைமுகம் பகுதி நிர்வாகி பிரதீப் நாம்தேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story