பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
துடியலூர்
கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி கணபதி நகரில் ஸ்ரீபட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இங்கு கன்னிமூல கணபதி, மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நிலத்தேவர் வழிபாடு, காப்பு அணிதல், முளைப்பாலிகை எடுத்து வருதல், 108 திரவியாகுதி, திருமுறை விண்ணப்பம், எந்திரம் வைத்தல், எண்வகை மருந்து சாற்றுதல், விமான கலசம் நிறுவுதல் ஆகிய நடைபெற்றன. இதையடுத்து 4 கால யாக பூஜைகள் நடந்து முடிந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி புனித நீர் அடங்கிய தீர்த்தக்குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவ ராமசாமி அடிகளார் தலைமையில் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பெருந்திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜை மற்றும் பேரொளி வழிபாடு ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story