பிரதமர் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துடன் தொடர்புபடுத்தி பிரதமர் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சரவணம்பட்டி
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துடன் தொடர்புபடுத்தி பிரதமர் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவதூறு கருத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இதுபோன்று செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் ‘நான் தான் பாலா’ என்ற முகநூல் பக்கத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து மற்றும் கார்ட்டூன் பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
3 பிரிவுகளில் வழக்கு
இதற்கிடையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் முகநூலில் அவதூறு கருத்து மற்றும் கார்ட்டூன் வெளியிட்டு வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாரத் சேனா அமைப்பை சேர்ந்த குமரேசன் என்பவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கோவையை சேர்ந்த பாலா என்பவர் மீது சாதி, மத, இன, மொழி விரோத உணர்ச்சிகளை தூண்டி விடுதல், அமைதியை குலைக்கும் வகையில் மற்றும் இரு தரப்பினரிடையே தீய எண்ணத்தை உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story