அரசு பஸ் ஜப்தி


அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 16 Dec 2021 8:16 PM IST (Updated: 16 Dec 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் ஜப்தி

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி அந்த பகுதியில் சைக்கிளில் சென்றார். அப்போது அரசு பஸ் மோதி பலியானார். இதற்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரின் மனைவி பிரபா கோவை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 496-ஐ இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால் இந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து பிரபா நிறைவேற்றுதல் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். பின்னர் இழப்பீடு வழங்காததற்காக அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் நேற்று காந்திபுரம் பகுதியில் கோவையில் இருந்து சேலத்துக்கு செல்வதற்காக நின்ற குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அரசு பஸ்சை கோர்ட்டு அமீனா ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்தினார்.


Next Story