அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா
அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை
அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சருக்கு கொரோனா
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடந்த சில நாட்க ளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இதையடுத்து அவர், மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.
இதில் அவருக்கு கொரோனா தொற்றுஇருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச். மருத்துவ மனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை
இது குறித்து தனியார் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியான தால், தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளார். விரைவில் நலமாகி வீடு திரும்புவார் என்றனர். மு.பெ.சாமிநாதன், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story